Saturday, November 17, 2018

கஜா புயலில் வேரோடு சாய்ந்த மரங்களை காப்பாற்றலாம்

#Coconut_Tree_Translocation

#தென்னை மரத்தினை வேரோடு பிடுங்கி ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றி நடும் முறை.

#கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களும், அதை உருவாக்க இத்தனை வருடங்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்த உழைப்பும் ஒரு நொடியில் தரைமட்டம் ஆனதை எண்ணி என் மனம் வருத்தப்பட்டது.. நானும் #விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். என் #தாத்தா சைக்கிளில் ஒவ்வொரு தென்னை நாற்றுகளை வாங்கி வந்து 2 ஏக்கரில் தென்னந்தோப்பை உருவாக்கினார்.. அவர் காலமாகி 40 வருடங்கள் ஆன பின்பும் அவர் வைத்த தென்னை மரங்கள் இன்றும் உள்ளது.

புயலால் வேரோடு வீசி எறியப்பட்ட தென்னை மரங்களை மீண்டும் நடுவதற்கு #தமிழக_அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் இதை செய்கின்றது. ஆனால் அரசு தன் கடமையாக இதனை செய்ய வேண்டும்.

#ஹைதராபாத்தில் என் அலுவலகத்திலும் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியிலும் கிட்டத்தட்ட 100 மரங்களுக்கு (குல்மொஹர், தூங்குமூஞ்சி மரம் போன்றவை) மேல் இடமாற்றம் செய்து அத்தனை மரங்களையும் பிழைக்க வைத்துள்ளோம்.

ஆனால் என் அனுபவத்தில் புயலால் பாதித்த தென்னை மரத்தினை இடமாற்றம் செய்ததில்லை. அதனால் #கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தென்னை ஆராய்ச்சி மையத்திற்கு (#Coconut_Development_Board) தொடர்பு கொண்டுள்ளேன்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில் நாம் மனம் தளராது நம்மால் முடிந்த அளவுக்கு விரைந்து செயல்பட்டு தென்னை மரங்களை பிழைக்க வைப்போம்.

#வேர்களில் #ஈரப்பதம் காய்ந்து பட்டு போவதற்குள் தமிழக அரசு #போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.