Sunday, August 12, 2018

கருணாநிதி உடல் நகர்ந்து செல்லும் காட்சி | Karunanidhi body moving

ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் கண்ணாடி பேழைக்குள் நகர்ந்து செல்லும் காட்சி. சரியான பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத எடப்பாடி அரசின் மெத்தனத்தால் கூட நெரிசல் ஏற்பட்டது. இரண்டு பேர் உயிர் இழந்தனர். நாட்டின் பிரதமருக்கு வழங்க வேண்டிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரிவர பாதுகாப்பு வழங்கவில்லை.





கூட்ட நெரிசலை சரிவர கட்டுப்படுத்த இயலாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அணைத்து தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில், புரட்சித்தலைவி அம்மா இறந்த பொழுது சட்ட ஒழுங்கையும், ராஜாஜி மண்டபத்தில் திரண்ட கூட நெரிசலையும் தன ஆளுமையால் கட்டுக்குள் வைத்திருந்த திருமதி.சசிகலா நடராஜன் அவர்களை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Saturday, August 11, 2018

RKNagar தேர்தலில் கூட்டனி பலம் அதிகம் இருந்தும் திமுக டெப்பாஸிட் கூட வாங்கததற்கு என்ன காரணம் தெரியுமா?

Lenin Veera Pandiyan

#RKNagar தேர்தலில் கூட்டனி பலம் அதிகம் இருந்தும் #திமுக டெப்பாஸிட் கூட வாங்கததற்கு என்ன காரணம்...
1. #TTVDhinakaran'க்கு மக்களுடைய ஆதரவு
2. பணம்
"பணம் தான் காரணம்னு நாங்களே சொல்ரோமே"... கொஞ்சம் பொறுங்கள் உடன் பிறப்புகளே, திமுக - பணம் இது இரண்டுக்கும் நான் பார்க்கும் கோணம் வேறு...தொடர்ந்து படியுங்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படத்திற்காக ஒருபோதும் தன் கொள்கையை விட்டுதர மாட்டார். அப்படிப்பட்ட ஒரு கொள்கை தான் அறிஞர் அண்ணாவின் "திமுக". தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் திமுக கொடியின் கருப்பு சிவப்பு நிறம் தன் சட்டையிலோ, அறையின் வர்ணங்களிலோ இருக்கும். படத்தில் புரட்சித்தலைவரின் பெயர் உதயசூரியன், கதிரவன் என்று இருக்கும். பாடல்களில் கூட திமுக சின்னமான சூரியன் இருக்கும்.
"உதய சூரியனின் பார்வையிலே" - அன்பே வா, 
அன்பே வா படத்தில் மக்கள் திலகம் 

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" - அரசகட்டளை,
"சூரியன் உதிசதுங்க, இங்கே காரிருள் மறைஞ்சதுங்க" - நம்நாடு. அண்ணாவின் புகைப்படங்கள், சிலைகள் தன் படங்களில் கண்டிப்பாக வைத்திருப்பார்.

அடிமைப்பெண் படத்தில் சூரியன் சின்னத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் புரட்சித்தலைவர் 

ஏன் தன் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான 'நடோடி மன்னன்' படத்தின் ஆரம்பத்தில் அவர் நிறுவனத்தின் லோகோவின் மேல் திமுக கொடி இருக்கும். திமுகவை தன் படத்தில் தூக்கி நிறுத்தியதற்காக தான் எம்.ஆர்.ராதா சுட்ட துப்பாகி குண்டை தன் கழுத்தில் சுமந்தார் நம் மக்கள் திலகம். இப்படி அவர் உயிரைக்கொடுத்து பட்டி தொட்டி எங்கும் திமுகவை அதன் சின்னமான உதயசூரியனை மக்களின் மனதில் பதிய செய்தார்.



எம்ஜிஆர் pictures logo 


ஆனால், பல தியாகிகள் உயிர்த்தியாகம் செய்து வளர்த்த திமுக என்னும் மாபெரும் கழகத்தை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்திய கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தன் ஒரு படத்திலாவது தங்கள் கட்சியை, சின்னத்தை அல்லது அண்ணாவின் கொள்கையை மக்களிடம் எடுத்துச்சென்றிருப்பாரா? உதயநிதி ஸ்டாலினின் ஒரு படத்திலாவது அண்ணாவின் படமோ அல்லது தங்கள் கட்சி தலைவர் கருணாநிதியின் படமோ இடம் பெற்றிருக்குமா? அப்படி கருணாநிதியின் படமோ திமுக கொடியோ உதயநிதி ஸ்டாலின் தன் படத்தில் தூக்கிபிடித்து இருந்தால் கட்சி முத்திரை குத்தி மற்ற கட்சியின் உன்மை விசுவாசிகள் அந்த படத்தை புறக்கணிப்பர், பிறகு எப்படி கோடிகளில் லாபம் ஈட்டுவது?
கொள்கைகள் அல்ல கோடிகள் தான் முக்கியம் என்று பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கருணாநிதி, கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி போன்றோர் செயல்பட்டதின் விளைவே RKNagarல் டெப்பாஸிட் கூட வாங்காமல் போனதிற்கு காரணம்.
திமுக தலைவர்கள் அவர்கள் வாரிசுகள் பணத்தின் மேல் கொண்ட மோகம் தான் திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம்.

பாவம் அப்பாவி தொண்டர்கள்...