Saturday, January 31, 2015

யார் குற்றம்? | whose offence?

மது அருந்திவிட்டு நடுவீதியில் மயங்கிக்கிடப்பது அந்த மாணவனின் குற்றமா? இல்லை குடியை கெடுக்கும் மதுவினை காசுக்காக கடை போட்டு விற்கும் அரசின் குற்றமா? வளர்ந்து வரும் இளைய சமுதாயம் தங்களை பின்பற்றுகிறார்கள் என்று தெரிந்தும் பணத்திற்காக பண்பாடில்லாமல் திரையில் நடிகனை நடிக்கவைக்கும் திரைத்துறையின் குற்றமா? வல்லவனாக வளரும் தன் பிள்ளை நல்லவனாகவும் வளர வேண்டும் என்பதனை மறந்து மதிப்பெண்களை மட்டும் பார்க்கும் பெற்றோர்களின் குற்றமா?  அம் மதிப்பெண்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு மாணவர்களை இயந்திரங்களாக மாற்றும் கல்வி முறையில் குற்றமா? அல்லது தாங்கள் தான் மாணவர்களின் இரண்டவது பெற்றோர்கள் என்பதை மறந்த ஆசிரியர்களின் குற்றமா? யார் குற்றம்?

Translation:
Is drinking alcohol is the offence done by the student? Or the offence that had done by the government which forgot about the people and running the government from the money earned by selling alcohol? Or the offence done by the cinema actors who encourages drinking alcohols in their movies only for money and forgot that young generations are following them? Or the offence did by parents who are concerning only on their talents and marks but forgot the self-discipline and self-esteem? Or the offence by the school teacher who forget that they are the second parents to the children? Or the offence by the education system which is making student as machine and change education as business? Whose offence is this?   

No comments:

Post a Comment